மணிப்பூர் காத்திருக்கிறது... பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்த காங்கிரஸ்! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.உலகம் முழுவதும் செல்வதற்கு விருப்பமும், ஆற்றலும் இருக்கும் பிரதமர் மோடிக்காக மணிப்பூர் காத்திருப்பதாக காங்கிரஸ் கட்சி மீண்டும் கடுமையாக விமர்சித்து சாடியுள்ளது.

 1½ ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் நீடித்து வரும் கலவரத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.இதனால் அங்கு கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறவும் பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தை வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-பிரதமர் மோடியின் பயணத்துக்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது என்றும்  உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு அவருக்கு நேரமும், ஆர்வமும், சக்தியும் இருக்கிறது என்றும் .ஆனால் மணிப்பூரில் துயரத்தில் வாடும் மக்களை சந்திப்பது அவசியமானது என அவர் நினைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அங்கு செல்வதற்கு அவருக்கு நேரமும் இல்லை என்றும் மணிப்பூர் முதல்-மந்திரி உள்பட தனது சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி எந்த அரசியல் தலைவர்களையும் சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார் என்றும் மணிப்பூரின் துயரம் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதி முதல் தணியாமல் தொடர்கிறது.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமரிசித்து கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur is waiting Congress slams PM Modi again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->