கோவைக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட 14 கோரிக்கை.. மத்திய அமைச்சரை சந்தித்தார் மா.சுப்பிரமணியன்.!! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடனான 15வது சுகாதார மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது தமிழ்நாடு அரசின் 14 கோரிக்கைகள் கொண்ட மனுவை மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

அந்த கோரிக்கை மனுவில்,

1) மருத்துவ கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி நுழைவுத்தேர்விற்கு எதிர்ப்பு.

2)கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி வேண்டும்.

3) 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்.

4) தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் நிறுவ வேண்டும்.

5) மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை.

6) சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான பொது கலந்தாய்வுக்கு ஆட்சேபனை

7) தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களை நிறுவுதல், மதிப்பீடு மற்றும் மருத்துவ கல்விக்கான இடங்களில் அதிகரிக்க வேண்டும்.

8) 2023 வரைவுக்கு ஆட்சேபனை பொது மக்களின் கருத்துக்காக சமீபத்தில் வெளியிடப்பட்டது.

9) காலியாகஉள்ள அனைத்து இந்திய எம்பிபிஎஸ் இடங்கள் மாநிலத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.

10) புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.

11) 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.

12) 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்.

13) 1000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள், 1000 புதிய கிராமப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவ வேண்டும்.

14) சென்னை, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவ சேவை கட்டிடம் நிறுவ வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaSubramanian submitted petition to Union Minister regarding TN demands


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->