தேவையே இல்லாமல் வாங்கப்பட்ட ரூ.660 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் !! - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பாக உபகரணங்கள் மற்றும் ரியாஜெண்டுகள் வாங்கியதில் பெரிய அளவிலான முறைகேடுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. 660 கோடி மதிப்பிலான மருத்துவ உபகரணங்களும், ரியாஜெண்டுகளும் பட்ஜெட் ஒதுக்கீடு இல்லாமல் வாங்கப்பட்டது அம்பலமாகி உள்ளது. 

அந்த மாநிலத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் இதர மையங்களின் பெயரில் செய்யப்படும் இந்த கொள்முதலில், அவற்றை பயன்படுத்த மருத்துவர்கள் இல்லாத மையங்களின் பெயரிகளிலும் இந்த உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. கடந்த  2022 மற்றும் 2023 ஆம் நிதி ஆண்டு மற்றும் தற்போதைய 2023-24 நிதியாண்டுகளின் தணிக்கை கணக்கு பொது அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டது.

அதில் சுமார் 660 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் ரியாஜெண்டுகளை ஸ்டேட் மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் எந்த பட்ஜெட் ஒதுக்கீடும் இல்லாமல் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பது இந்த தணிக்கையில் தெரியவந்துள்ளது. 

இந்த தணிக்கையில் மருத்துவ சேவை கழகம் இந்த கருவிகள் மற்றும் ரியாஜென்ட்களை வாங்கி மாநிலத்தில் உள்ள 776 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு விநியோகித்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் இந்த 776 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 350 PCHகள் உள்ளன, அண்ணல் அங்கு இந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்பமோ அல்லது மருத்துவர்களோ அங்கு இல்லை.

மருத்துவ சேவை இயக்குனர் இந்த PHCகளின் தேவைகள் குறித்த தகவல்களை  கணக்கெடுப்பு நடத்தாமலே  இந்த உபகரணங்களை வாங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த பொருட்கள் அனைத்து PHCகளிலும் ஒரே மாதிரியாக விநியோகிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை எங்கு அதிகமாக உள்ளது, எங்கே குறைவாக உள்ளது என கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இப்போது இந்த உபகரணங்கள் அங்கு பயனற்றதாகி வருகின்றன. தொழில்நுட்ப பணியாளர்கள் பற்றாக்குறையால், அவற்றை இயக்கவோ, பயன்படுத்தவோ யாரும் இல்லை. டஜன் கணக்கான இடங்களில் சேமிப்பு இல்லாததால், அவை உரிமை கோரப்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தணிக்கையாளர்  தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Medical equipments worth 660 crores bought without need


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->