உத்திரபிரதேசத்தை பார்த்து மெய்சிலிர்த்த பில்கேட்ஸ் மனைவி.! என்ன கூறினார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


உலகத்திற்கு முன்மாதிரியாக உத்தரபிரதேசம் மாநிலம் திகழ்வதாக பில்கேட்ஸ் முன்னாள் மனைவி பாராட்டியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை தலைவர் பில்கேட்சின் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ். இவர் பில் கேட்ஸ் உடன் இணைந்து பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இந்த அறக்கட்டளை நிறுவனத்தின் சார்பில் உத்திரபிரதேச மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதியத்யநாத்தை மெலிண்டா கேட்ஸ் நேற்று சந்தித்தார்.

அதன் பிறகு செய்தியாளிடம் பேசிய மெலிண்டா கேட்ஸ், "இவ்வளவு நெருக்கமான மக்கள் தொகை மற்றும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் கொரோனா எனும் பெரும் தொற்றை உத்திரபிரதேச அரசு கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதாரம், பாதுகாப்பு, ஊட்டச்சத்து, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கல்வி போன்ற விஷயங்களில் உத்தரபிரதேசம் மாநிலம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்வதாக புகழ்ந்து பேசியுள்ளார்."

இதனிடையே கொரோனா பெருந்தொற்று காலத்தில் உத்திரபிரதேச மாநில அரசுக்கு ஆதரவு அளித்த பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்றி தெரிவிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Melinda Gates has praised the state of Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->