சரிவர பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவு..கலக்கத்தில் ஊழியர்கள்!  - Seithipunal
Seithipunal


மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த திடீர் முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும் இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதன் மூலம் மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும். மேலும் இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்று பிப்ரவரி 10 பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக செய்தி வெளியாகி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Meta to sack non-performing employees Distraught employees!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->