கொலை முயற்சி குற்றவாளி தப்பிச்செல்ல உதவி; ஆம் ஆத்மியின் MLA அமனத்துல்லா கான் மீது போலீசார் வழக்கு..! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மியின் டில்லி ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமனத்துல்லா கான் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மூன்றாம் முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதாவது, போலீஸ் விசாரணையில் குறுக்கீடு செய்து குற்றவாளி தப்பிக்க வழி வகுத்ததாக, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொண்டிருந்த ஷாபாஸ் கானை கைது செய்ய டில்லி போலீசார் ஜாமியாவில் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியிருந்தனர்.

அந்நிலையில், அதிகாரிகள் ஷாபாஸ் கானை கைது செய்தபோது, அமனத்துல்லா கான் தலையிட்டு, கைது நடவடிக்கையை கேள்வி எழுப்பி, அந்த நபர் குற்றவாளி அல்ல என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினருக்கும், குற்றப்பிரிவு போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் கைதி செய்யப்பட்ட நபர் ஷாபாஸ் கான் தப்பி சென்றுள்ளார்.

இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: அமனத்துல்லா கானும் அவரது ஆதரவாளர்களும் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்குத் தீவிரமாகத் தடையாக இருந்தும், கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி, இறுதியில் சந்தேக நபர் தப்பிச் செல்ல அனுமதித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு புகார் அளித்துள்ளது.

அத்துடன், இது குறித்து  எம்.எல்.ஏ., அமனத்துல்லா கான் மீது சட்ட நடவடிக்கை தற்போது நடைபெற்று வருகின்றது என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police file a case against Aam Aadmi Party MLA Amanatullah Khan for helping an attempted murder convict escape


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->