மிக்ஜம் புயல் எதிரொலி: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணத் தொகை! முதல் மந்திரி அதிரடி அறிவிப்பு!
Mikjam cyclone cm announces Rs 2500 family
ஆந்திர மாநில கடலோரப் பகுதிகளில் மிக்ஜம் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததில் நெல்லூர், திருப்பதி, பிரகாசம் உள்ளிட 10 மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின. இந்நிலையில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.
அப்போது முதல் மந்திரி ஜெகன்மோகன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இயல்பு வாழ்க்கை மீண்டும் வரும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும்.
மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ. 2,500 நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Mikjam cyclone cm announces Rs 2500 family