முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் நாளை அறிமுகம்!
Mini LPG cylinder in Ration Shop 2022
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மலிவு விலையில் சர்க்கரை, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் வரும் அக்டோபர் 6-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்திருந்தார்.
மேலும், சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அண்மையில் அறிவித்திருந்தார்.
முதல்கட்டமாக சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பல்பொருள் அங்காடியில் சமையல் சிலிண்டர்கள் விற்பனை துவங்கப்பட உள்ளது.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்காக மினி சிலிண்டர்கள் விநியோகம் நாளை தொடங்க உள்ளது. முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
English Summary
Mini LPG cylinder in Ration Shop 2022