சீனாவிடமிருந்து இந்தியா சிக்கலான சவாலை எதிர்கொள்கிறது - மந்திரி ஜெய்சங்கர்
Minister jaishankar says India is facing a tough challenge from China
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத்தில் உள்ள அனந்த் நேஷனல் பல்கலைக்கழகத்தில் மோடியின் வளர்ச்சி குறித்து 'மோடியின் இந்தியா எழுச்சி பெறும் சக்தி' என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், சீனாவிடமிருந்து இந்தியா மிகவும் சிக்கலான சவாலை எதிர்கொள்கிறது. இந்திய-சீன எல்லைப் பகுதிகளில் நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றாமல் நடுநிலையான முடிவை எடுக்க நரேந்திர மோடி அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளும் ஒருவித சமநிலையைக் கண்டறிய வேண்டும். கடந்த 3 வருடங்களாக சீனாவுடனான எல்லை பகுதி பிரச்சனையாக இருந்து வருகிறது. எல்லைப் பகுதிகளில் சீனா படைகள் கட்டுப்பாடுகளை மீறினால் நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு நீடிக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் பரஸ்பர மரியாதை, உணர்திறன் மற்றும் ஆர்வம் ஆகியவை இரு நாடுகளுக்கிடையேயான உறவின் அடிப்படையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister jaishankar says India is facing a tough challenge from China