பார்க்க வராத இன்ஸ்டா நண்பனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மைனர் சிறுமி - பீகாரில் பரபரப்பு.!
minor girl arrested for kidnape boy and threatend in bihar
பார்க்க வராத இன்ஸ்டா நண்பனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மைனர் சிறுமி - பீகாரில் பரபரப்பு.!
பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரைச் சேர்ந்தவர் மாணவர் ரிஷப். ஜே.இ.இ. பொறியியல் தேர்வுக்கு தயாராகி வந்த இவருக்கு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் மைனர் சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், அந்த சிறுமி கடந்த மாதம் 26-ந்தேதி மாணவர் ரிஷப்பை நேரில் வந்து சந்திக்கும்படி தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த நேரத்தில் மாணவரால் போக முடியவில்லை. இதையடுத்து ரிஷப் கடந்த 30-ந்தேதி தனது நண்பனை அழைத்து கொண்டு சிறுமியை காண்பதற்கு ஆவலாக சென்று உள்ளார். அங்கு சிறுமியை பார்த்ததும், ரிஷப் நண்பரை திரும்பி போகும்படி தெரிவித்துள்ளார்.
அதன் படி ரிஷப்பின் நண்பனும் அங்கிருந்துச் சென்றுவிட்டார். அப்போது அந்த சிறுமி மூன்று பேருடன் சேர்ந்து, அந்த மாணவரை கடத்தி சென்று ஒரு இடத்தில் அடைத்து வைத்துள்ளார். இதன்பின், அந்த சிறுமி மாணவரின் குடும்பத்தினருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்து ரூ.50 லட்சம் வரை பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
மேலும், பணம் தரவில்லை என்றால், மாணவரை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரிஷப்பின் குடும்பத்தினர் பணத்துடன் வரவேண்டிய இடம் குறித்து சிறுமியிடம் கேட்டதும் அவர் தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து ரிஷப்பின் குடும்பத்தினர், போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிரனை விசாரணை மேற்கொண்டு, மாணவரின் செல்போன் உரையாடல்களையும் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ரிஷப் சிறுமியிடம் பேசியது தெரிய வந்தது. இதான் பின்னர் சிறப்பு விசாரணை குழு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று சிறுமியை கைது செய்தனர்.
அவரிடம் இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் அந்த சிறுமி மைனர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியுடன் கடத்தலுக்கு உதவிய மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். வர்களிடமும் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
minor girl arrested for kidnape boy and threatend in bihar