காணாமல் போன கல்லூரி மாணவர் படுகொலை...! தீவிர விசாரணையில் போலீசார்...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் கமலாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(17). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் சிவக்குமார் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதிக்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிவகுமாரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். 

ஆனால் சிவக்குமார் எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகுமார் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் புறநகர் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் வாலிபர் பிணம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், அந்த சடலம் காணாமல் போன சிவக்குமார் என்பது தெரிய வந்தது. மேலும் சிவகுமாரை யாரோ கொலை செய்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சிவகுமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? முன்விரோதம் காரணமாக? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Missing college student murdered in Karnataka


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->