திருமாவளவனுக்கு திராணி இல்லை; கனிமொழிக்கு 'செலக்டீவ் அம்னீஷியா' அண்ணாமலை பேட்டி..! - Seithipunal
Seithipunal


''சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசையிடம், போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது: ''புதிய கல்விக் கொள்கைக்கான கையெழுத்து இயக்கத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டு ஆதரவு அளித்துள்ளனர். குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் கையெழுத்து போடுகின்றனர்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் நிருபர்களின் மேலும் பேசுகையில்; ''சென்னையில் முன்னாள் கவர்னர் தமிழிசையிடம், போலீசார் நடந்து கொண்ட விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வீதியில் மக்களை சந்திப்பது கட்சிகளின் கடமை. மக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக முறையில் அவர்களின் கையெழுத்துக்கு வலிமை இருக்கிறது எனபதை எடுத்துக்காட்டும் பா.ஜ., தலைவர்களை சீண்டுவது, தமிழிசையை கைது செய்தது மட்டுமல்லாமல், அவரிடம் 03 மணி நேரம் போலீசார் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சியினர் கொடுக்கும் உத்தரவு தவறு என்பதை தெரிந்து, அவர்களாக விடுவித்து உள்ளனர். இது தி.மு.க., அரசின் கோழைத்தனத்தையும் பயத்தையும் காட்டுகிறது.'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அங்கு குறிப்பிடுகையில்; ''திருமாவளவன் சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்துகிறார். மும்மொழிக் கொள்கை குறித்து பேசுவதற்கான திராணியை அவர் இழந்து விட்டார். பொய் பேசியே திராணி இழந்து விட்டார். 03-வது மொழி கட்டாயம் ஹிந்தி சொல்லி கொடுக்கும் திருமாவளவன், தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கிறார். போலி அரசியல்வாதிகளை தோல் உரித்து கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் வெற்றி தான்.'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடந்து அண்ணாமலை அவர்கள் பேசுகையில்; ''தி.மு.க., எம்.பி., கனிமொழிக்கு 'செலக்டீவ் அம்னீஷியா'. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் தி.மு.க., அங்கம் வகித்த போது சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.676 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.75 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் ஹிந்தியை வளர்க்க, பார்லிமென்டில் 170 பரிந்துரைகள் வைத்தார். இன்று சென்னையில் மேடை ஏறி அவர் ஹிந்தி எதிர்ப்பு குறித்து பேசுகிறார். இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டிய காலகட்டத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.'' என விமர்சித்துள்ளார்.

அத்துடன், '' அப்போது தமிழ் வளர்ச்சிக்கு தி.மு.க., எதுவும் கிள்ளிப் போட்டதா? கூட்டணி ஆட்சியில் நடந்தது எல்லாம் கனிமொழி மறந்து விட்டார். தற்போது அரசியலுக்காக பேசிக் கொண்டுள்ளார். மொழியை தடுக்க இவர்களுக்கு உரிமை இல்லை. அதற்காக அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடவில்லை. நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. எதற்காக இரண்டு வகையான சமுதாயத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசிடம் பதில் இல்லை. தேவையில்லாமல் தொகுதி மறுசீரமைப்பு என பேசிக் கொண்டு உள்ளார்கள். என்று அண்ணாமலை அவர்கள் நிருபர்களிடம் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kanimozhi has selective amnesia Annamalai interview


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->