இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு..இளையராஜாவுடன் சந்திப்பு குறித்து அண்ணாமலை பதிவு!
Music is an encounter with God. Annamalai talks about meeting with Ilayaraja
இசைஞானி இளையராஜாவை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை இளையராஜாவிடம் நீண்ட நேரம் உரையாடினார்.
1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இளையராஜா'வேலியன்ட்' (Valiant) என்னும் தலைப்பில் தனது முதல் சிம்பொனியை இயற்றியிருக்கிறார். இது வருகிற 8-ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், இசைஞானி இளையராஜாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து பேசினார். சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற அண்ணாமலை இளையராஜாவிடம் நீண்ட நேரம் உரையாடினார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,"இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், "வேலியன்ட்" எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற 8-ம் தேதி அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்து வாழ்த்து கூறி மகிழ்ந்தேன் என்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேற, தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Music is an encounter with God. Annamalai talks about meeting with Ilayaraja