பாலிவூட்டை விட்டு வெளியேறிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்..!
Famous director and actor lef Bollywood
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான அனுராக் காஷ்யப் மும்பையை விட்டு வெளியேறியுள்ளார்.
அனுராக் காஷ்யப் பிளாக் பிரைடே , தி லன்ச் பாக்ஸ் , கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் ஆகிய திரைப்படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். 1993 ஆண்டு மும்பை குண்டு வெடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ''பிளாக் பிரைடே'' என்கிற திரைப்படம் பல தேசிய விருதுகளை வென்றதுடன் பல சர்ச்சைகளையும் உண்டாக்கியது.

இவர் தமிழில் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விடுதலை-2 லியோ மற்றும் மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் ஒரு பேட்டியில் கூறியதாவது; ''நான் பாலிவுட்டிலிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். இந்த துறை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. அனைவரும் ரூ.1000 கோடி சம்பாதிப்பதை நோக்கிச்செல்கிறார்கள். படைப்பு திறனுக்கு மதிப்பில்லை.'' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் சொன்னது போலவே பாலிவுட் சினிமா மற்றும் மும்பையை விட்டு வெளியேறி, தற்போது பெங்களூருவில் வாடகை வீட்டில் குடியிருப்பதாக கூறப்படுகிறது.
English Summary
Famous director and actor lef Bollywood