அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்பு - வி.பி. ராமலிங்கம் வேண்டுகோள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 13 ஆம் தேதி முதல் புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வி.பி. ராமலிங்கம், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசும் சூழலில் அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேச மிகவும் சிரமப்படுவதை அரசு அறியுமா? அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புகள் எடுக்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் தெரிவித்ததாவது:- மாநிலத்தில் ஏற்கனவே ஆரம்பக்கல்வி அறிவை வளர்ப்பது உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளது என்றுத் தெரிவித்துள்ளார். 

இதற்கு வி.பி ராமலிங்கம் :- தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் தடுமாறுகிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு மற்றும் பொது அறிவை வெளிப்படுத்த தயக்கம் உள்ளது. அதனால், அவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்தினால் எளிதில் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்றுள்ளார். 

இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி : "மாணவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். நமது ஆசிரியர்கள் திறமையானவர்கள் மற்றும் தகுதியானவர்கள். அவர்களால் சி.பி.எஸ்.இ. அளவில் வகுப்புகளை எடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla vb ramalingam request english class to govt school students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->