மாடலிங் ஆசை காட்டி நிர்வாண ஷூட்.. இளம் பெண்களை ஏமாற்றி போலி ஃபேஷன் போட்டோகிராபர்ஸ் உல்லாச வாழ்கை!
Modeling Desire to Shoot Nude Fake fashion photographers cheat young girls
கொல்கத்தாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் ஒருவர் இளம் பெண்களை ஏமாற்றி வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பிரபல ஃபேஷன் புகைப்படக் கலைஞர் தகதா கோஷ். இவரும் பிரதிக் பால் என்ற வாலிபரும் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அந்த கணக்குகள் மூலம் மாடல் ஆக விரும்பும் பெண்களை போட்டோஷூட்கள் நடத்துவதாகவும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டி ஸ்டுடியோவிற்கு வரவழைத்து நிர்வாண புகைப்படங்கள் எடுத்து பின்னர் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து 22 மற்றும் 25 வயதுடைய இரண்டு பெண்கள் தாங்கள் ஏமாற்றப்ட்டை உணர்ந்து தற்போது முன்வந்து புகார் அளித்ததால் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தநிலையில் இருவரும் புகைப்படக்கலைஞர் தகதா கோஷ் நம்பரை கண்டுபிடித்து அவருக்கு போன் செய்து தங்களுக்கு நடந்தது பற்றி கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போலீஸ் நிலையம் சென்று தகதா கோஷ், தனது பெயரில் நடந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் புகாரின் பேரில் குற்றவாளி பிரதிக் பால் போலீசாரால் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டான். மேலும் தலைமறைவான மற்றொரு குற்றவாளி தபன் பால் தேடப்பட்டு வருகிறான்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தப் பெண்களை ஆடிஷன்களுக்கு அழைத்துள்ளனர் என்றும் முதல் பெண் மே-ஜூன் மாதங்களில் மத்தியம்கிராம் ஸ்டுடியோவிற்கு வந்தார் என்றும் முதலில், ஒரு சாதாரண போட்டோஷூட் நடந்தது என கூறினார்.
அதனை தொடர்ந்து பின்னர், நிர்வாண போட்டோஷூட்கு வற்புறுத்தி உள்ளனர் என்றும் அந்தப் பெண் மறுத்ததால், தனது மாடலிங் கனவை மறந்துவிடுமாறு அவளை மிரட்டியுள்ளனர் என கூறினார் . இதனால் பயந்துபோன அந்த பெண் நிர்வாண படப்பிடிப்பிற்கு ஒப்புக்கொண்டாள் என்றும் அப்போதுஇரண்டு ஆண்களும் அவளை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்றும் அந்தச் செயலைப் படம்பிடித்தும் உள்ளனர் என கூறினார் .
மேலும் மாடலின் வாய்ப்புகளை எதிர்பார்த்து அந்த பெண் அமைதியாக இருந்தாள் என்றும் ஆனால் அப்படி எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் உணர்ந்துள்ளார் என்றும் இரண்டாவது பெண் கடந்த அக்டோபரில் இதேபோன்ற முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் போலீசார் தெரிவிக்கின்றனர்.
English Summary
Modeling Desire to Shoot Nude Fake fashion photographers cheat young girls