நாட்டில் முதல்முறையாக கேரளாவில் குரங்கம்மை 1-பி வைரஸ் பாதிப்பு உறுதி! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்காவில் குரங்கம்மை தொற்று நோய் வேகமாக பரவிய நிலையில், பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னை பன்னாட்டு விமான நிலையம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் வகையில் பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குரங்கம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரள மாநிலம் மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் தீவிரமானதாக அறியப்படும் நிலையில், நோய் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் உயிரிழப்பார் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே அரியானாவின் ஹிசார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு, கடந்த வாரம் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் தலைநகர்  டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இவை  மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாமால், விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkeypox 1-B virus confirmed in Kerala for the first time in the country


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->