பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் - இன்று முதல் அமல்.! - Seithipunal
Seithipunal


288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் கூட்டணி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட்டை துணை முதலமைச்சர் அஜித்பவார் கடந்த மாதம் சட்டசபையில் தாக்கல் செய்தார். அதில் பெண்களுக்கான மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் 'லாட்கி பகின்' திட்டத்தை அறிவித்தார். இந்த நிலையில் திட்டத்திற்கான தகுதிவாய்ந்த பெண்களை தேர்வு செய்யும் பணி மிக குறுகிய காலத்தில் நடைபெற்று திட்டமிட்டப்படி நேற்று திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 

 

இந்தத் விழா புனே பலேவாடி பகுதியில் உள்ள சிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தை கூட்டாக தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து பெண்களின் வங்கி கணக்குகளில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்குரிய உதவித்தொகை மூவாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதுகுறித்த குறுந்தகவலும் பெண்களின் செல்போனுக்கு அனுப்பப்பட்டது.

இதற்கு முன்னதாக இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய ஏக்நாத் ஷிண்டே, மக்களாகிய நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு அளித்தால், இந்த தொகை 2,000 அல்லது 3,000 ஆக உயர்த்தப்படும். இந்த திட்டத்தால் பெண்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

month 1500 scheme start from today in maharastra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->