பரபரப்பு! மதிய உணவில் இறந்து கடந்த பல்லி! 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


ஓடிஸா மாநிலத்தில் பல்லி இறந்து கிடந்த மதிய உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டத்தை அடுத்த சிராப்பூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கரி வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மதிய உணவு இடைவேளையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து  மாணவர்களிடம் யாரும் அதனை சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பின்னர் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது தகவலின் பெயரில் தலைமை ஆசிரியர்  மதிய உணவு சாப்பிட்ட அனைத்து மாணவர்களுக்கும் சீதபூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்தப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறும் என்றும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மதிய உணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More than 100 students were admitted to hospital after eating lunch with dead lizard in Odisha state


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->