தெலுங்கானாவில் அறிமுகமான காலை உணவுத் திட்டம்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவில் அறிமுகமான காலை உணவுத் திட்டம்.!

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தைப் போல், சுமார் 23 லட்சம் அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவளிக்கும் நோக்கில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தெலுங்கானா மாநிலத்தில் நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. 

இந்தத் திட்டத்தை தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ், உள்ளிட்ட தெலுங்கானா அமைச்சர்கள் பல்வேறு இடங்களில் முறைப்படி தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய அமைச்சர் கே.டி.ராமராவ், "மாநிலம் முழுவதும் உள்ள 27,147 அரசு பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். 

இந்தக் காலை உண்வு மெனுவில் இட்லி-சாம்பார், கோதுமை, ரவா உப்புமா, பூரி-உருளைகிழங்கு குருமா, கிச்சிடி, தினை இட்லி மற்றும் பொங்கல் உள்ளிட்டவை இருக்கும். இதேபோன்ற திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால், தெலுங்கானாவில் இந்தத் திட்டத்தை 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயல்படுத்த வேண்டும் என்று தெலங்கானா முதலமைச்சர் விரும்புகிறார். பள்ளிகளில் உணவின் தரம் பராமரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

morning food scheme start in telungana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->