உலகின் மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டு.. நாக்பூரில் தயாரிப்பு.. !! - Seithipunal
Seithipunal



உலகின் மிக அதிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை தயாரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது. தற்போது உலகின் பல்வேறு நாடுகளின் ராணுவங்களில் டிஎன்டி, ஆர்டிஎக்ஸ் மற்றும் டைனமைட் உள்ளிட்ட வகை வெடி குண்டுகள் தான் பயன்பாட்டில் உள்ளன. 

இந்த நிலையில் தான் இந்தியாவில் டிஎன்டி வகை வெடி குண்டை விட 2.01 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 'எக்கனாமிக் எஸ்பிளோசிவ்ஸ் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனம் தான் உலகின் மிக சக்தி வாய்ந்த 'செபெக்ஸ் 2' என்ற வெடிகுண்டை தயாரித்துள்ளது.

இந்த 'செபெக்ஸ் 2' வெடிகுண்டுகளை இந்தியாவில் உள்ள அனைத்து ஏவுகணைகளிலும் பயன்படுத்த முடியும். இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், இந்தியா சுய சார்பு திட்டத்தின் கீழ் நாக்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் 'செபெக்ஸ் 2' என்ற உலகின் மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டை தயாரித்துள்ளது. 

இந்த வெடிகுண்டை இந்திய கடற் படை சமீபத்தில் தான் சோதனை செய்தது. இந்த வெடிகுண்டில் இருந்து 20%  அளவுக்கு வெப்பம் வெளியாகிறது. டிஎன்டி யை விட 'செபெக்ஸ் 2'வில் பாதிப்பு 28% அதிகமாக இருக்கிறது. விரைவில் நாக்பூர் ஆலையில் இந்த 'செபெக்ஸ் 2' வெடிகுண்டுகள் தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் முப்படைகளுக்கும் இந்த 'செபெக்ஸ் 2' வெடிகுண்டுகள் வழங்கப் படவுள்ளன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் எண்ணம் உள்ளது. இப்போதே பல்வேறு நாடுகள் இதற்கான விருப்பம் தெரிவித்துள்ளன" என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most Powerful Bomb Has Been Prepared in Nagpur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->