மருமகளை விபசாரத்தில் தள்ளிய மாமியார்- மயக்க மாத்திரை கொடுத்து விபரீதம்!
Mother-in-law drugged daughter-in-law into prostitution
ஆந்திர மாநிலம் அருகே தனது மகனின் காதலியை மாமியார் மயக்க மாத்திரை கொடுத்து விபசாரத்தில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், அனக்கா பள்ளியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த சந்து என்பவரை காதலித்து வந்துள்ளார்.இதனை தொடர்ந்து கண்மூடித்தனமான இவர்களது காதலுக்கு சிறுமியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த காதல் ஜோடிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.இதையடுத்து திருமணத்திற்கு பிறகு இருவரும் பெத்தாபுரத்தில் வீடு வாடகை எடுத்து தங்கி காதல் ஜோடிகள் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மகள் காணாமல் போனது குறித்து அவரது பெற்றோர் அனக்கா பள்ளி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் பெத்தாபுரத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர்.மேலும் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக சந்துவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்றபோது அவரது பெற்றோர்கள் மகளை ஏற்க முடியாது என தெரிவித்தனர். இதனால் சிறுமியை சந்துவின் தாயார் மாமியார் நீலிமாவிடம் ஒப்படைத்தனர்.இந்தநிலையில் மாமியார் நீலிமாவும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சிறுமியை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட வைத்தனர் என கூறப்படுகிறது .
அடிக்கடி மயக்க மாத்திரைகளை கொடுத்து சிறுமியை விபசாரத்தில் தள்ளினார் என்றும் இதனால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமி சுய நினைவை இழந்தார் என கூறப்படுகிறது.மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விசாகப்பட்டினம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இந்தநிலையில் அங்கு சிறுமிக்கு சிறிது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அப்போது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதை சிறுமி தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியார் நீலிமா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அனக்கா பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Mother-in-law drugged daughter-in-law into prostitution