ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே பொய் - மக்களவையில் விளாசிய திமுக எம்.பி.!
mp dhayanithi speech in parliment meeting
இன்று பாராளுமன்றத்தின் மக்களவையில் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
"ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அரசு. ஆனால், வரலாறு காணாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடிவிட்டது. 10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?
சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை ஒன்றிய அரசு.
பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.
இடைநிலை நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நல்லது வரவில்லை, நாமம் தான் வந்தது. ஏழைகளுக்கு பயனில்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.
மொழியை வைத்து மக்கள் வாழ்வை சீரழித்திடும் மோடி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற சபதமேற்போம்" என்று பேசியுள்ளார்.
English Summary
mp dhayanithi speech in parliment meeting