மத்தியப் பிரதேசம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு வகுப்பிற்கு ஏற்றார்போல் புத்தகப் பையின் எடைகள் நிர்ணயம்! - Seithipunal
Seithipunal


மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் புத்தகப் சுமையைக் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்பிற்கு ஏற்றாற்போல் புத்தகப் பையின் எடைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய பள்ளிக் கல்வித் துறையின் துணைச் செயலர் பிரமோத் சிங் வெளியிட்ட சுற்றக்கையில் தெரிவித்திருப்பதாவது,

"மாநில அரசு மற்றும் என்சிஇஆர்டி நிர்ணயித்த புத்தகங்களைத் தவிர வேறு எந்தப் புத்தகங்களையும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

1 மற்றும் 2-ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 கிலோ முதல் 2.2 கிலோ எடையுள்ள பள்ளிப் பைகளையும், 3, 4 மற்றும் 5-ஆம் வகுப்புகள் 1.7 கிலோ முதல் 2.5 கிலோ எடையுள்ள புத்தகப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும், 6 மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 கிலோ வரையிலும், 8-ஆம் வகுப்பு மாணவர்கள் 2.5 கிலோ முதல் 4 கிலோ வரையிலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்பு  மாணவர்கள் 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையிலும் புத்தகப் பைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளுக்கு ஏற்றவாறு புத்தகப் பைகளின் எடையைத் தீர்மானிக்க வேண்டும்". என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP govt reduce book load govt school students


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->