தொடரும் மிரட்டல்கள்... இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சல்! திடீர் பரபரப்பில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal




மத்திய பிரதேசம், இந்தூரில் உள்ள தேவி அகல்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். 

மர்ம நபர்கள் விடுத்த மின்னஞ்சலில், விமான நிலையத்தில் சிலர் வெடிகுண்டு வைக்கப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இந்தூர் விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 

உள்ளூர் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சேர்ந்து விமான நிலையம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

பின்னர் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து போலீசார் சட்டப்பிரிவு 507 இன் கீழ் வழக்கு பதிவு செய்து போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த மிரட்டலினால் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு நிலவியது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP Indore airport bomb threat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->