ம.பி.யில் பதற்றம்: விஷமாக மாறிய உணவு! 100 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், குவாலியரில் உள்ள அரசு உடற்கல்வி நிறுவனத்தில் உணவு சாப்பிட்ட 100 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

குவாலியர் லட்சுமிபாய் தேசிய உடற்கல்வி நிறுவனத்தில் அளிக்கப்பட்ட பன்னீர் சப்ஜி உணவால் சுமார் 100 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சாப்பிட்ட உணவு விஷமாக மாறி இருக்கலாம் என தெரிவித்தனர். 

இது குறித்து நிறுவனத்தின் பதிவாளர் அமித் யாதவ் தெரிவித்திருப்பதாவது, நேற்று சில மாணவர்கள் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP poisonous food 100 students treated hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->