மஹாராஷ்டிராவில் வார்காரிஸ் பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம்.!!
mp sanjay raut condems for police attack varkaris devotees in maharastra
மஹாராஷ்டிராவில் வார்காரிஸ் பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆலந்தி பகுதியில், கிருஷ்ணரின் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இந்தது திருத்தலத்திற்கு வார்காரிஸ் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காகச் சென்றனர்.
கடந்த முறை இந்தத் திருத்தலத்திற்கு ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த முறை 75 பேர் சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் செல்ல முயன்றதால் போலீசாருக்கும் வார்காரிஸ் பக்தர்களுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது போலீசார் பக்தர்கள் மீது தடியடி நடத்தினார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் வார்காரிஸ் பக்தர்கள் மீது தடியடி நடத்துவது, இதுவே முதல் முறை என்பதால், இந்த சம்பவத்திற்காக உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற எம்.பி. சஞ்சய் ராவத் ஆளுங்கட்சியை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:- ''ஐயோ.. இந்துத்துவாத அரசின் பாசாங்குகள் அம்பலமானது.. முகமூடி அவிழ்ந்தது. மகாராஷ்டிராவில் முகலாயர்கள் மறு அவதாரம் எடுத்துள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
mp sanjay raut condems for police attack varkaris devotees in maharastra