பொங்கல் அன்று வண்டலூர் பூங்கா செயல்படுமா? - வெளியானது முக்கிய அறிவிப்பு.!
vandaloor zoo open pongal festival
சென்னை தாம்பரம் அருகே வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. சுற்றுலாத்தலமான இங்கு தினமும் ஏராளமான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், பொங்கல் விடுமுறையின் போது பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்ய அனுபவத்தை உறுதி செய்வதற்காக, உயிரியல் பூங்கா நிர்வாகம் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. அதாவது:-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்கா திறக்கப்படும். அன்றைய தினம் பார்வையாளர்கள் ஆன்லைன் தளங்கள் மற்றும் டிக்கெட் கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை வாங்கலாம். உயிரியல் பூங்காவிற்குள் இரு சக்கர வாகனங்களுக்கும், 500 மீட்டர் தொலைவில் கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ, கார், வேன், கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோரின் தொடர்பு எண்ணைக் குறிப்பிடும் கை வளையம் வழங்கப்படும். பார்வையாளர்கள் பிளாஸ்டிக் நிரம்பிய உணவுப் பொருட்களையோ பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களையோ கொண்டு வர வேண்டாம். பூங்காவில் நீலகிரி மந்தி, சிங்க வால் குரங்கு, இந்தியக் காட்டெருது, நீலமான், கூழைக்கிடா போன்ற அரிய வகை இனங்கள் சமீபத்தில் பிறந்தவை.
க்ரிபோன் கழுகு, எகிப்திய கழுகுகள் மற்றும் அனுமான் குரங்கு போன்ற சமீபத்தில் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட விலங்குகளை பார்வையாளர்கள் பார்க்கலாம். பார்வையாளர்கள் சட்ட நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக விலங்குகளை கிண்டல் செய்யவோ அல்லது உணவளிக்கவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பூங்கா நிர்வாகம் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
vandaloor zoo open pongal festival