'ஸ்பேடெக்ஸ்' திட்டம்.. 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்களை இணைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று இரவு தீவிரமாக ஈடுபட்டனர். தீவிரமாக வேலை செயல்படுத்தினால் இந்த தொழில்நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

கடந்த 7-ந் தேதி ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் இரண்டு செயற்கைக்கோள்களை  இணைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நடைபெற்ற திட்டம்  எதிர்பாராத செயற்கைக்கோள் நகர்வு காரணமாக ஸ்பேடெக்ஸ் பணியில் தாமதங்கள் ஏற்பட்டன. இதனால்  குறிப்பாக 500 மீட்டரில் இருந்து 225 மீட்டராக அதனுடைய தூரத்தை குறைக்கும் போது, எதிர்பாராத விதமாக நடந்த செயலால் 2 செயற்கைக்கோள்களும் 6.5 கிலோமீட்டர் தூரத்துக்கு விலகி சென்றன இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து பின்னர் மீண்டும் இணைப்பு பரிசோதனையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து கடந்த 9-ந் தேதி மீண்டும் இணைக்க முயற்சித்தபோது  பல்வேறு காரணங்களால் அதுவும் முடியாமல் போனது பெரும் பின்னடைவை சந்தித்தது.

இந்த நிலையில் மீண்டும் செயற்கைக்கோள்களை படிப்படியாக தூரத்தை குறைத்துக்கொண்டே  இஸ்ரோ விஞ்ஞானிகள் வந்தனர். நேற்று முன்தினம் இரவு 500 மீட்டர் அளவில் கொண்டு வர முயற்சித்தனர் அதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டதால் நேற்று இரவு 1.5 கிலோமீட்டர் தூரத்திற்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கிய சிக்னல்களால் இரண்டு செயற்கைக்கோள்களும் 230 மீட்டர் தொலைவில் ஒருவழியாக கொண்டுவரப்பட்டது.

மேலும் தொடர்ந்து இதனுடைய வேகத்தை குறைத்து இரண்டு செயற்கைக்கோள்களையும் இணைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று இரவு தீவிரமாக ஈடுபட்டனர்.இதை  தீவிரமாக வேலை செயல்படுத்தினால் இந்த தொழில்நுட்பத்தை அறிந்த 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The SpadeX project ISRO scientists working on connecting two satellites


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->