ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையம்..மத்திய மந்திரி தகவல்!
Passport Seva Kendra in every Parliamentary Constituency Central Minister Information
ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குணா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மைய திறப்பு விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பாஸ்போர்ட் சேவை மையத்தை திறந்து வைத்தார். அப்போது திறப்புவிழாவில் பேசிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாஅவர் பேசியதாவது:
நாட்டில் கையால் கடிதங்கள் எழுதும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாம் முயற்சிக்க வேண்டும் என்றும் ஏனெனில் அது இதயத்தின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்று கூறினார் .மேளம் பேசிய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தபால் நிலையங்களின் சேவைகளில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என பெருமிதம் தெரிவித்தார் .
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையத்தை திறக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறிய மத்திய தகவல் தொடர்புத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாஅதன்படி, நாட்டின் 543 தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என்றும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல்துறை ஆகியவை உறுதிகொண்டுள்ளன என தெரிவித்தார்.
English Summary
Passport Seva Kendra in every Parliamentary Constituency Central Minister Information