மனைவி, மகன்களை கொலை செய்த கணவர் தற்கொலை: விசாரணையில் அதிர்ச்சி தகவல்!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், தேவ்தே கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் ராம் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராம் 30 வயதான மனைவி, 7 வயது மகன் மற்றும் 4 மாத குழந்தை மூவரின் உடல் வீட்டின் முன்பு இருந்த தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. 

கொலை செய்த ராம் தோட்டத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட ராமின் சட்டை பையில் தற்கொலை குறித்த கடிதம் ஒன்று சிக்கியது. 

அதில் குடும்பத்தை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக குடும்பத்தினர், கணவன்-மனைவி இடையே பிரச்சனை சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MP wife sons killed husband suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->