3000 ச. அடி பரப்பளவு.. 10 படுக்கையறைகள்.. 70 மீ கடற்கரை .. திகைக்க வைக்கும் விலையில் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் ஆடம்பர பங்களா பரிசளித்த அம்பானி..!! - Seithipunal
Seithipunal



இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், பெரும் பணக்காரரும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களின் தலைவருமான முகேஷ் அம்பானி ஆடம்பர வாழ்க்கை வாழ்வதோடு அல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு அவ்வப்போது விலையுர்ந்த ஆடம்பர பரிசுகள் வழங்குவதை தொடர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நீட்டா அம்பானியும் இணைந்து திருமணம் நடைபெறவுள்ள தங்களது மகன் ஆனந்த் அம்பானிக்கும், மருமகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் துபாய் பாம் ஜுமேராவில் ஒரு ஆடம்பர வில்லாவை பரிசாக அளித்துள்ளனர். அந்த வில்லாவின் மதிப்பு சுமார் ரூ. 640 கோடி என்று கூறப்படுகிறது. 

சுமார் 3 ஆயிரம் ச. அடி பரப்பளவு கொண்ட இந்த வில்லா, துபாயில் மிகவும் விலை உயர்ந்த, ஆடம்பர சொத்துக்களில் ஒன்றாக அறியப் படுகிறது. மேலும் இந்த ஆடம்பர வில்லாவில் மிகவும் விஸ்தாரமான 10 படுக்கை அறைகள் மற்றும் 70 மீ அளவில் ஒரு கடற்கரையும் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மேலும் இந்த வீடு இத்தாலிய பளிங்குக் கற்களால் கட்டப் பட்டுள்ளது. மேலும் இந்த வீடு மிக உயர் தரமான கூரைகள் கொண்டுள்ளது. மேலும் இந்த வில்லாவில் ஒரு குளம் அமைக்கப் பட்டுள்ளதோடு, இந்த வில்லா ஒரு நேர்த்தியான கலைப் படைப்பையும் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே ஆனந்த் மற்றும் ராதிகாவுக்கு ஏற்கனவே இரண்டு ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மிக பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு கொண்டாட்டம் நடந்து வருகிறது. இவர்களது திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mukesh Ambani Gifted Anant Ambani A Luxurious Villa in Dubai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->