மன அழுத்ததால் மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை.. உயர்கல்வி நிலையங்களில் தொடர்ந்து நிகழும் சோகம்..! - Seithipunal
Seithipunal


மன அழுத்தம் காரணமாக ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் காரணமாக உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், மும்பை ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குள்ள மாணவர் விடுதியின் 7வது மாடியில் இருந்து குதித்து அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில்,  ‘நான் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தேன். அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன். என் தற்கொலைக்கு யாரும் பொறுப்பு கிடையாது’ என தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே உயர்கல்வி நிலையங்களில் மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.

104 
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.KA


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai IIT Student Committed Suicide Due To Depression


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->