ஒன்பது லட்சத்தில் மின் விளக்கு கோபுரம் - இளையராஜாவுக்கு குவியும் பாராட்டுகள்.!
music director ilaiyaraja built electric light tower in koodalur
ஒன்பது லட்சத்தில் மின் விளக்கு கோபுரம் - இளையராஜாவுக்கு குவியும் பாராட்டுகள்.!
இந்திய சினிமாவில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவராக வளம் வருபவர் இளையராஜா. அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல், இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இளையராஜா தனது சொந்த மாவட்டமான தேனி கூடலூர் நகராட்சியில் 16 மீட்டர் உயர் கோபுர விளக்கை அமைத்திருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒன்பது லட்சம் ரூபாய் செலவழித்து இந்த மின்விளக்கு கோபுரத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
தனது எம்.பி பதவியை நல்ல முறையில் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வசதியை ஏற்படுத்திக் கொடுத்த இளையராஜாவுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
music director ilaiyaraja built electric light tower in koodalur