பிரதமருக்கு 'நமோ' டி ஷர்ட்.. இந்திய அணியினருக்கு 'தண்ணீர்' வரவேற்பு - மும்பையில் தொடங்கியது உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டம்..!
Namo T shirt For PM Modi and Water Salute For Team India in Mumbai Airport
பார்படாஸில் நடைபெற்ற T 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு T 20 சாம்பியன் பட்டதைக் கைபற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பார்படாஸில் திடீரென ஏற்பட்ட புயலால் இந்திய அணியினர் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்த இந்திய அணியினர், வழிநெடுக ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் ஹோட்டல் சென்று சேர்ந்தனர்.
இதையடுத்து பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரோடு இந்திய வீரர்கள் அனைவரும் தனி தனியாக தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உலகக் கோப்பையோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பிரதமரின் இல்லத்தில் நடந்த சிறப்பு விருந்திலும் கலந்து கொண்டனர். அப்போது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணை தலைவர் ரோஜர் பின்னி ஆகியோர் பிரதமருக்கு நமோ என அச்சிடப் பட்ட டி ஷர்ட்டை பரிசளித்தனர்.
இதையடுத்து மும்பையில் நடக்கவுள்ள வெற்றிக் கொண்டாட்டத்திற்காக டெல்லியிலிருந்து கிளம்பி மும்பை சென்றடைந்த இந்திய அணியினருக்கு விமான நிலையத்தில் அவர்கள் தரையிறங்குவதற்கு முன்பே தீயணைப்புத் துறையினர் விமானத்தின் மேல் தண்ணீர் பீய்ச்சியடித்து வரவேற்பளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
English Summary
Namo T shirt For PM Modi and Water Salute For Team India in Mumbai Airport