திடீர் சோதனை! அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல்! - Seithipunal
Seithipunal


குஜராத்தில் உள்ள அதானிக்கு சொந்தமான துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் போதை பொருட்களின் எண்ணிக்கையும் போதை பொருளை பயன்படுத்துவரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து அவ்வபோது பல்வேறு போதைப்பொருட்களை கடத்துபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத் மாவட்டம்  கட்ச் மாவட்டத்தில்  இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான அதானிக்கு சொந்தமான முந்த்ரா துறைமுகம் ஒன்று உள்ளது. இந்தத் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.

சோதனையில் ஆப்பிரிக்க நாடுகளான சியரா லியோன் மற்றும் நைஜீரியாவுக்கு அனுப்ப இரண்டு கண்டெய்னர்களில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் சுமார் ரூ. 110 கோடி மதிப்புள்ள 68 லட்சம் டிராமடோல் என்ற போதை மாத்திரைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த டிராமடோல் மாதிரிகளை கடந்த 2018 ஆம் ஆண்டு என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.110 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ராஜ்கோட்டை சேர்ந்த வணிக ஏற்றுமதியாளர் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜ்கோட், காந்திநகர் மற்றும் காந்திதாம் ஆகிய இடங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narcotic pills worth Rs 110 crore seized at Adani port


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->