கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் - அதிரடி உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம்.! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி மாநகராட்சியில் பிரம்மபுரம் பகுதியில் திடக்கழிவு மையம் உள்ளது. இந்த மையத்தில் கடந்த 6-ந் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டு நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பன்னிரண்டு நாட்களாக ஆகியும் இந்தத் தீயை அணைக்க முடியவில்லை. இருப்பினும் பல நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை மைய தீர்ப்பாய நீதிபதி கோயல் தெரிவித்ததாவது:-

"கொச்சி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாநில அரசின் அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். 

அதுமட்டுமல்லாமல், இந்த தீ விபத்திற்கு கொச்சி மாநகராட்சி முழு பொறுப்பேற்று ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும். ஒரு மாதத்திற்குள் அபராத தொகையை மாநில தலைமை செயலாளரிடம் ஒப்படைக்க வேண்டும். 

இந்த நிவாரணத்தின் மூலம் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும். அத்துடன், கொச்சி மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி மேயர் அணில்குமார் தெரிவித்ததாவது:- "இந்த அபராத தொகையை மாநகராட்சியால் செலுத்த இயலாது. இது தொடர்பாக சட்டப்படி மேல்முறையீடு செய்யப்படும்" என்றுத் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National Green Center Tribunal hundrad crores fined to kochi corporation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->