நாடு முழுவதும் ஆன்லைனில் நீட் தேர்வு - நீட் தேர்வு சீரமைப்புக் குழு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இதற்கிடையே, பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வுக்கு முன்னரே வினாத்தாள் வெளியானதாகவும், தேர்வு மையத்தில் தேர்வு கண்காணிப்பாளரே வினாத்தாள்களை நிரப்பியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த சம்பத்திற்கு எதிராகப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் குரல் எழுப்பினர்.

இதையடுத்து மத்திய அரசு நீட் தேர்வினை வெளிப்படையாகவும், நியாயமாகவும்  நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக  இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணணை தலைவராக நியமித்து, உயர்நிலை நிபுணர் குழு ஒன்றை அமைத்தது.

இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மூலம் நீட் தேர்வை நடத்த முடியாத இடங்களில் வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்ப வேண்டும் என்றும், தனியார் பள்ளி, கல்லூரிகளை நீட் தேர்வு மையங்களாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide neet exam online neet exam preparation team


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->