ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் - விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை.!
near andhira youngman sucide for online loan
ஆந்திர மாநிலத்தில் உள்ள என்.டி.ஆர் மாவட்டம், சுராய பலேனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜஷ். இங்கிலாந்து பிரிட்ஜ் கோர்ஸ் நிறுவனத்தில் ஆலோசகராக வேலை செய்து வரும் இவர் ஆன்லைன் மூலம் லோன் செயலியில் கடன் வாங்கி, அதனை மொத்தமாக திருப்பி செலுத்தியுள்ளார்.
இருப்பினும், லோன் ஆப் நிறுவனத்தினர் ராஜேஷுக்கு மேலும் 10 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக, ராஜேஷ் லோன் ஆப் நிறுவனத்தினர் போன் செய்த போது போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த லோன் ஆப் நிறுவனத்தினர், ராஜேஷ் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது மற்றும் ஆபாசமான பெண்ணிடம் வீடியோ காலில் பேசுவது போன்ற போட்டோ மற்றும் வீடியோவை எடிட் செய்து ராஜேஷ் மனைவி ரத்தினகுமாரிக்கு புலனத்தில் அனுப்பி வைத்தனர்.
இதைப்பார்த்த ரத்தினகுமாரி ஆத்திரமடைந்து ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ், தான் லோன் ஆப் நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அவர்கள் இதுபோன்று போட்டோ மற்றும் வீடியோவை எடிட் செய்து அனுப்பியதாக தெரிவித்தார்.
மேலும் ரத்தினகுமாரி, ராஜேஷிடம் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜேஷ் நேற்று காலை "நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்" என்று மனைவி ரத்தினகுமாரிக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவர் ராஜேஷ் அனுப்பிய குறுஞ்செய்தியை பார்த்த ரத்தினகுமாரி அதிர்ச்சி அடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ராஜேஷ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ராஜேஷ் போட்டோவை எடிட் செய்து அவரது மனைவிக்கு அனுப்பியது யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near andhira youngman sucide for online loan