அசாம் || தாயை விட்டு பிரிந்த குட்டி யானை.! சித்ரவதை செய்த கிராம மக்கள்..! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் கிராம மக்கள் குட்டி யானையை செருப்பால் அடித்து கொடூரமாக சித்ரவதை செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் ஹோஜா பகுதியில் யானைக்குட்டி ஒன்று அதன் தாயிடமிருந்து பிரிந்து கிராம பகுதிக்குள் நுழைந்தது. இந்த குட்டியானையைப் பார்த்ததும் கிராம மக்கள் சிலர், ஈவு இரக்கம் இல்லமால் செருப்பால் அடித்தும், இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியும் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், குட்டி யானையின் காதை பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

இதனை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது இது குறித்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா... அந்த குழந்தை யானையிடம் இப்படி கொடூரமாக நடந்துக் கொண்ட உங்களை கடவுள் கண்டிப்பாக தண்டனை கொடுப்பார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். 

மேலும், சிலர் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near assam village peoples attack in small elephant


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->