சிப்ஸ் கொடுத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வடமாநில இளைஞர் - போக்சோவில் கைது.!  - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலம் பெங்களூரு தொட்டபயலகெரே கிராமத்தில் வசித்து வருபவர் மணீஷ். இவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். வேலைக்காக பெங்களூருவுக்கு வந்து தற்போது பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டிற்கு அருகே ஒரு தம்பதியும் வசித்து வந்தனர். 

அவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றுள்ளது. இந்நிலையில்,  அந்த தம்பதி வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளனர். அதனால், குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளது. அப்போது மணீஷ் அந்த தம்பதியின் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்த குழந்தைக்கு வாழைப்பழம் மற்றும் சிப்ஸ் போன்றவற்றை வாங்கி கொடுத்துள்ளார். 

அதன் பின்னர், அந்த குழந்தையை பலாத்காரம் செய்து விட்டு, அங்கிருந்து தப்பித்து விட்டார். இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், அந்த சிறுமி நடந்த அனைத்தையும் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு, அதிர்ச்சி அடைந்த அவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணீசை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near banglore young man arrested for sexuall harassment case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->