பீகார் : வங்கியில் கொள்ளையடிக்க வந்த நபர்கள்.! அடித்து தெறிக்க விட்ட பெண் காவலர்கள்.!  - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள ஹாஜிபூர் பகுதியில், உத்தர பீகார் கிராமின் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கி எந்த நேரம் பார்த்தாலும் மிகவும் பரபரப்பாகவும், ஆள் நடமாட்டத்துடனும் இருந்துக்கொண்டே இருக்கும். பாதுகாப்பு பணிக்காக, சாந்தி குமாரி மற்றும் ஜூஹி குமாரி என்ற இரண்டு பெண் காவலர்கள் இருந்துள்ளனர். 

அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரில் இருவர் வங்கியின் வெளியிலேயே நின்றனர். மீதமுள்ள இருவர் மட்டும் முகமூடி அணிந்துகொண்டு வங்கிக்குள் நுழைந்தனர். இதைப்பார்த்து சந்தேகமடைந்த இரண்டு பெண் காவலர்கள் அந்த நபர்களை முகமூடியை கழற்றி வங்கி கணக்கு புத்தகத்தைக் காட்டுமாறு தெரிவித்துள்ளனர். 

உடனே, அவர்கள் இருவரும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கிகளை காவலர்கள் மிரட்டியுள்ளனர். அதெற்கெல்லாம் அவர்கள் பயப்படாமல், அவர்களை எதிர்த்து தாக்கி அடித்து விரட்டியுள்ளனர். 

இந்த சம்பவம் அனைத்தும் வங்கியின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி மணீஷ் உடனே புறப்பட்டு வங்கிக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தனர். 

இதையடுத்து, பெண் காவலர்கள் சாந்தி குமாரி மற்றும் ஜூஹி குமாரியின் வீர செயலுக்காக பரிசு வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இதற்கிடையே, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar woman police officers attack robbers in bank vedio viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->