பீகாரில் பரபரப்பு - கர்ப்பிணி பெண்ணை எரித்து கொன்ற காதலன் கைது.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். இதில், சிறுமி கர்ப்பமாகி உள்ளார். இதையறிந்த அந்த வாலிபர் அந்த சிறுமிஇடம் பேசுவதைத் தவிர்த்துள்ளார். 

இதையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இருப்பினும், கர்ப்பமான சிறுமி, திருமணத்திற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். 

சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் தகராறாக மாறியதால், வாலிபர் சிறுமியை தீ வைத்து, எரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவர் சிறுமியின் பெற்றோரை பிடித்து, வீட்டில் அடைத்து வைத்துள்ளார். 

இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் அங்கிருந்து தப்பித்து சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் படி போலீசார் விசாரணை செய்து நான்கு பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 

அதன் பின்னர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியை வாலிபர் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near bihar young man arrested for kill pregnent girl friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->