மாற்றுத்திறனாளிகள் சாதனை படைக்க கலாச்சாரம் தடையாக இருக்க கூடாது - திரவுபதி முர்மு.!
near delhi disable person day celebration draubati murmu speach
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 3 ம்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்த விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டில் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:
"நாட்டின் மக்கள் தொகையில், இரண்டு சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளார்கள். அவர்கள் யாரையும் சார்ந்து வாழாமல், கவுரமாக வாழும் சூழலை உறுதிசெய்ய வேண்டியது மிக அவசியம்.
அத்துடன், சிறந்த கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுதந்திரமாகச் செயல்படுதல் மற்றும் சமமான வேலைவாய்ப்பு ஆகியவற்றையும் உறுதி செய்ய வேண்டியதும் நம்முடைய கடமை.
அதேபோல், மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கும், அறிவாற்றலால் சாதனை படைப்பதற்கும், இந்தியாவின் கலாச்சாரமோ, பண்பாடோ தடையாக இருக்கக்கூடாது. அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சாதிப்பதற்கு ஏற்ற சூழலையும், போதுமான வாய்ப்புகளையும் உருவாக்கி தர வேண்டும்.
மற்ற குழந்தைகளை போலவே மாற்றுத்திறனாளி குழந்தைகளும் தரமானக் கல்வியைப் பெறுவதில், சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதையே, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலமே அதிகாரமிக்கவர்களாகவும், தற்சார்பு பெற்றவர்களாகவும் மாற்ற முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
English Summary
near delhi disable person day celebration draubati murmu speach