முகநூலில் அறிமுகமாகிய நண்பர்.! இன்ஸ்டாகிராமில் பழிவாங்கியதால் கைது.! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூல் மூலம் சச்சின் சிங் என்ற நபர் அறிமுகமானார். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தியது. இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திய சச்சின் அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டமிட்டார்.

ஆனால், அதற்குள் அந்த இளம் பெண், கல்லூரி படிப்பை முடித்து விட்டு பணியில் சேர்ந்திருந்தாள். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனை சச்சிங் சிங்கிடம் அந்த இளம்பெண் பகிர்ந்துள்ளார். 

இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த சச்சிங் இளம்பெண்ணுடனான நட்பைத் தொடரவும் முடியாது, விடவும் முடியாமல் தவித்து வந்தார். இதற்கு பழி வாங்க நினைத்த சச்சிங் பின்னர் இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணின் பெயரில், அவரது புகைப்படம் உள்ளிட்ட தனிப்பட்ட அடையாளங்களைக் கொண்டு ஒரு கணக்கை ஆரம்பித்தார். 

அந்த கணக்கில் ஆபாச வர்ணனைகளை நிரப்பியதோடு, ’பாலியல் தேவைக்கு அழைக்கவும்’ என்று இளம்பெண்ணின் அலைபேசி எண்ணையும், முகநூல் முகவரியையும் குறிப்பிட்டுள்ளார். இதனால், நிம்மதியை இழந்த அந்த இளம்பெண் டெல்லி சைபர் க்ரைம் போலீஸ் புகார் அளித்தார். அதன் படி, போலீசார் வழக்கு பதிவு செய்து சச்சிங் சிங்கை, கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi man arrested obscene photos uplode social media


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->