டெல்லி : நான்கு மாடிக் கட்டிடத்தின் தரைத்தளம் விழுந்து ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்.!! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதியில் அமைத்துள்ள நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளம் மற்றும் படிக்கட்டு இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு அதிகாரிகளின் தெரிவிக்கையில், "நேற்று மாலை 6.28 மணியளவில் குதுப் ரோடு பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் படிக்கட்டுகள் திடீரென சரிந்து விழுந்துள்ளது என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது, அதன் படி, இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன என்று தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர் பீகாரில் உள்ள சீதாமர்ஹியில் வசிக்கும் குலாப் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் துணிக் கடையின் உரிமையாளரிடமும் வேலை செய்து வந்தார். இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi man died and three peoples injury for building collapse


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->