காரைக்காலில் பரிதாபம்.! தாயை பேசவைப்பதற்காக மகள் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தோமாஸ் அருள் வீதியைச் சேர்ந்தவர்கள் ரமேஸ்வரன்-முத்துமாரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில், ரமேஸ்வரன் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், முத்துமாரிக்கும், அவரது தாயார் அமுதாவிற்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்துள்ளது. பல வகையில் பேசுவதற்கு முயற்சித்தும் தனது தாயாருடன் முத்துமாரியால் பேசமுடியவில்லை. இதனால் மனமுடைந்த முத்துமாரி எலி மருந்து சாப்பிட்டு, கடந்த 8ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ராமேஸ்வரனின் உறவினர்கள் மருத்துவமனைக்கு சென்று முத்துமாரியிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர், "தனது தாய் கடந்த மூன்று ஆண்டுகளாக பேசாமல் இருந்து வருகிறார். அவரை பயமுறுத்தி பேசவைப்பதற்காக எலி மருந்து சாப்பிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முத்துமாரி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் சிகிச்சை அளிக்க முடியாததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

ஆனால், அங்கும் சிகிச்சை பலனளிக்காததால் முத்துமாரி மீண்டும் காரைக்கால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை பேசவைப்பதற்காக எலி மருந்து சாப்பிட்ட மகள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karaikal daughter sucide for mother not speak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->