கர்நாடகா : வயிற்று வலியால் துடித்த சிறுமி : அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரு நகரில் பதினொரு வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக பெற்றோர் ஒவ்வொரு மருத்துவமனையாக கொண்டு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். ஆனால், அவருக்கு வயிறு வலி தீராத ஒன்றாக இருந்து வந்தது.

அதன் பாதிப்பு கடந்த எட்டு மாதங்களாக அதிகரித்து கொண்டே சென்றுள்ளது. இருப்பினும் அந்த வலிக்கான காரணம் என்னவென்று அறிய முடியவில்லை. இந்த தீராத பிரச்சனையால், பள்ளி படிப்பையும் அந்த நிறுத்தி விட்டார். 

இதைத் தொடர்ந்து, அந்த சிறுமியை இரைப்பை சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்றபோது, மருத்துவர் அவரை முழு அளவில் எண்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளார். 

அப்போது, சிறுமியின் வயிற்றில் பெரிய பந்து வடிவில் முடி இருந்தது தெரிய வந்துள்ளது. அது, சாப்பிட்ட உணவுடன் முடியும் கலந்து ஒருவித தோற்றத்துடன் காணப்பட்டு, மிக பெரிய அளவில் நீளமாக இருந்துள்ளது. 

இதனால், அந்த முடிப்பந்தை எண்டோஸ்கோபி மூலம் வெளியேற்ற முடியவில்லை. பின்னர், சிறுமிக்கு லேபரோஸ்கோபி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அதன் மூலம் அரை கிலோ எடை கொண்ட முடிபந்து நீக்கப்பட்டது. தற்போது வலி குறைந்து, சிறுமி உடல்நலம் தேறி வருகிறார். 

இது தொடர்பாக சிறுமியிடம் நடத்தப்பட்ட கவுன்சிலிங்கில், மனஅழுத்தம் அதிகரிக்கும்போதெல்லாம், அவர் தலைமுடியை பிய்த்துண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. 

இதனை சிறுமியின் பெற்றோர்கள் பலமுறை கவனித்தபோதும், அலட்சியத்துடன் இருந்துள்ளனர். இதுவே சிறுமியை, சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. 

இதன் மூலம், சிறுவர் மற்றும் சிறுமிகள் இடையே அமைதியான உளவியல் சார்ந்த பிரச்சனைகள் காணப்படுவதும், அது வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்திவுள்ளதும் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataga half kg hair removed in girl stomak


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->