நாடகத்திற்கு ஒத்திகை பார்த்த சிறுவன்.. பரிதாபமாக உயிரிழந்த சோகம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா டவுன் கவுளகோட் பேரங்கானை பகுதியை சேர்ந்த நாகராஜ் பாக்யலட்சுமி தம்பதி. இவர்களுக்கு சஞ்சய் கவுடா என்ற மகன் இருந்தார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நாளை அவரது பள்ளியில் நடக்கும் கன்னட ராஜ்யோத்சவா விழாவில் சஞ்சய் பங்கேற்று, பகத்சிங் வேடம் அணிந்து நடிக்க இருந்தார். இதற்காக அவர் ஒத்திகைப் பார்த்து வந்தார். 

அந்த வகையில், சஞ்சய் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது பகத்சிங்கை தூக்கிலிடும் காட்சியை சஞ்சய் நடித்து கொண்டிருந்த போது, முகத்தை ஒரு துணியால் மூடி கழுத்தில் கயிறை கட்டிக்கொண்டு சோபாவில் இருந்து குதித்துள்ளான். 

அப்போது எதிர்பாராத விதமாக அவனது கழுத்தை கயிறு இறுக்கியுள்ளது. அந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால், சஞ்சய் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். 

இந்நிலையில் வெளியே சென்றிருந்த அவனது பெற்றோர், வீட்டுக்கு திரும்பி வந்தபோது, சஞ்சய் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பரங்கி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka children died in drama Rehearsal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->