தலித் சிறுவன் மீது திருட்டுபழி.! இரக்கமின்றி கட்டி வைத்து அடித்த கொடூரர்கள்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் தலித் சிறுவனை, ஒரு கும்பல் அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பதினான்கு வயதுடைய தலித் சிறுவன் உயர் சாதிப் பெண்ணிடம் தங்கக் காதணிகளைத் திருடிச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

அந்தக் குற்றச்சாட்டின் பேரில், திருட்டு வழக்கில் அந்த சிறுவன் மீது சந்தேகம் அடைந்த உயர் சாதிப் பிரிவினர் சிலர், கடந்த வியாழகிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் அந்த சிறுவன் வீட்டிற்கு சென்று வெளியே இழுத்து வந்து, கம்பத்தில் கட்டி வைத்து இரக்கமின்றி அடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், சிறுவனை தாக்கிய 10 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் பெங்களூரில் இருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கெம்படேனஹள்ளி கிராமத்தில் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near karnataka dalit children attack for theif case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->